top of page
Pasipayaru / Green Gram (பாசிப்பருப்பு)

பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது தனித்துவமான ஸ்டார்ச்சைக் கொண்டுள்ளது. இது செரிமானப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் மற்ற பயறுகளைவிட பாசி பயறானது எளிதில் செரிமானம் அடைவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Pasipayaru / Green Gram (பாசிப்பருப்பு)

₹85.00Price
Quantity
  • பயன்கள் ;

    பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை ;

    பாசி பயறினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவற்றை வாங்கி ஈரமில்லாத அதிக வெப்பம் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பாசி பயறானது முளைக்க வைத்தோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து சூப்புகள், கேக்குகள், புட்டிங்குகள், ஐஸ்கிரீம்கள், இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன. ஆரோக்கியம் மற்றும் பொலிவு தரும் பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

bottom of page